சாலையோரம் நடந்து சென்ற மாணவி மீது மோதிய புல்லட்.. தூக்கி வீசப்பட்ட மாணவி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2022, 5:29 pm
Tirupur Acc - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் அருகே பள்ளி மாணவி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருப்பூர் சாலை ராயர்பாளையம் அருகே நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவிகள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி இரு சக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. சாலையோரம் இருந்த பள்ளத்தை பார்த்த மாணவிகள் ஒதுங்கி சென்ற போது எதிரே வந்த இரு சக்கர வாகனம் ஒரு மாணவி மீது மோதியது.

இதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் வந்த நபரும் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மாணவியையும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது விபத்து நடந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றது. சாலையோரம் உள்ள பள்ளத்தின் காரணமாக அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏறடுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.

நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை சீர் செய்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Views: - 841

0

0