என்னை செல்லமா சின்னவர் என்றே கூப்பிடுங்கள்.. சின்னவர் என்று கூறினாலே பல பேருக்கு வயிற்று எரிச்சல் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2022, 3:46 pm
Udhayanithi - Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கம் கூட்டம் கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், 2083 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொற்கிழிகளைப் பரிசாக வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், என்னைச் சின்னவன் என்றே கூப்பிடுங்கள். உங்களுடைய உழைப்பு மற்றும் அனுபவத்துடன் ஒப்பிடும்போது நான் சின்னவன் தான். எனவே, என்னைச் செல்லமாகச் சின்னவன் என்றே கூப்பிடலாம். என்னைச் சின்னவரே என்று கூறினாலே பல விமர்சனங்கள் எழுகிறது. பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்.

இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை. கடந்த சில நாட்களாகவே அவர்களுக்குள்ளாகவே அவர்களைத் திட்டிக்கொண்டு கல் எறிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவிற்கு எனத் தனியாக வரலாறு எல்லாம் கிடையாது. நமது திமுக இயக்கத்திற்கு வரலாறு இருக்கின்றது, அந்த வரலாற்றுக்குச் சாட்சியாக திமுக மூத்த முன்னோடிகளாக நீங்கள் உள்ளீர்கள்.

நீங்கள் இல்லையென்றால் திமுக கிடையாது, எனவே என்னைப் போன்ற இளைஞர்களை, கழகத்தின் மூத்த முன்னோடிகள் கைகளைப்பிடித்து வழி நடத்திட வேண்டும், நீங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும், உங்க வழிகாட்டுதலோடு நாங்கள் வழி நடக்கிறோம் என பேசினார்.

Views: - 370

0

0