இதை நினைத்து சிரிக்கிறதா..? அழுகிறதா-னே தெரியல…. நீங்களே பாருங்க இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தை…!!

Author: Babu Lakshmanan
28 November 2023, 11:20 am
Gold Rate - Updatenws360
Quick Share

இதை நினைத்து சிரிக்கிறதா..? அழுகிறதா-னே தெரியல…. நீங்களே பாருங்க இன்றைய தங்கம், வெள்ளி நிலவரத்தை…!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது. அதன்படி அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.5,780க்கும், ஒரு சவரன் ரூ.46,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து  ஒரு கிராம் ரூ.4,714க்கும், சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் ரூ.37,712க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையிலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 3128

0

0