வாரத்தின் முதல் நாள் சூப்பர்… இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா..? நகை பிரியர்கள் நிம்மதி..!

Author: Babu Lakshmanan
12 February 2024, 12:07 pm
Quick Share

வாரத்தின் முதல் நாள் சூப்பர்… இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா..? நகை பிரியர்கள் நிம்மதி..!

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே நிலை தொடர்கிறது. அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,830-க்கும், ஒரு சவரன் ரூ.46,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,776-க்கும், ஒரு சவரன் ரூ.38,208-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.00-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 2282

0

0