ஏர்.ஆர்.ரஹ்மான் வீட்டில் விஷேசம்… திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் ஸ்டாலின் : திட்டமிடல் இல்லாததால் கடும் போக்குரவத்து நெரிசல்.. மக்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2022, 9:01 pm
ARR Daughter Reception - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : கவரப்பேட்டை அருகே இசையமைப்பபாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் வருகை தரவுள்ள நிலையில் சாலைகளை உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைப்பேட்டை பகுதியில் உள்ள ARR ஃபிலிம் சிட்டியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மூத்த மகள் கதிஜா ரக்மான் ரியாசுதீன் சேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இசை பயிலும் மாணவர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக முதல்வர் வருகையையொட்டி சாலைககளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உடனடியாக சீரமைக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சரியான திட்டமிடல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில பகுதிகளில் ஒரு மணி நேர நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Views: - 397

0

0