கடவுள் பாட்டை காதல் பாட்டாக மாற்றிய யுவன் சங்கர் ராஜா..-ஆத்தா பாட்டை காப்பியடித்த 5 இசையமைப்பாளர்கள்..!

Author: Vignesh
10 April 2023, 11:30 am
yuvan-updatenews360
Quick Share

சில பாடல்களை நாம் கேட்கும் போது இதை எங்கேயோ கேட்டிருக்கோமே என்று பலமுறை யோசித்து இருக்கின்றோம். அப்படி பழைய பட பாடல்களை இப்போது ரீமேக் செய்யும் கலாச்சாரம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கடவுள் பாட்டையே காதல் பாட்டாக மாற்றிய சில இசையமைப்பாளர்களும் அந்த வரிசையில் இருக்கிறார்கள். அந்த வகையில் ஆத்தாவே சூலாயுதத்தை தூக்கிக்கொண்டு வரும் அளவுக்கு சாமி பாடல்கள் எல்லாம் குத்து பாட்டாக மாற்றி உள்ளனர். அது என்னென்ன என்பதை இங்கு பார்போம்.

தேவா:

deva-updatenews360

பல இன்னிசை பாடல்களை கொடுத்த தேவா கந்த சஷ்டி கவசத்தை காப்பி அடித்து ஒரு பாடலுக்கு மெட்டு போட்டு உள்ளார். அதாவது சரத்குமார், ரோஜா நடிப்பில் வெளிவந்த சூரியன் படத்தில் 18 வயது என்ற ஒரு மார்க்கமான பாடல் வரும். அந்தப் பாடல் கந்த சஷ்டி கவச பாடலான சஷ்டியை நோக்க சரவண பவனார் என்ற பாடலின் காப்பி என்பது பலரும் அறியாத ஒன்று.

ஸ்ரீகாந்த் தேவா:

srikanth deva-updatenews360

அப்பா வழியில் வந்த ஸ்ரீகாந்த் தேவா கணபதி பாடலை காப்பியடித்து ஒரு படத்திற்கு மெட்டு போட்டு உள்ளார். அந்த வகையில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் வரும் சென்னை செந்தமிழ் என்ற பாடல் மகா கணபதி என்ற பாடலின் காப்பி தானாம்.

எஸ் ஏ ராஜ்குமார்:

s a rajkumar-updatenews360

பல காதல் பாடல்களை கொடுத்த எஸ் ஏ ராஜ்குமார் பெருமாளின் ஶ்ரீ ஶ்ரீனிவாசம் என்ற பாடலின் மெட்டை ஒரு படத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார். அதாவது முரளி, லைலா நடிப்பில் வெளிவந்த காமராசு படத்தில் வரும் பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு என்ற பாடல் பெருமாள் பாடலின் காப்பியாம்.

யுவன் சங்கர் ராஜா:

Yuvan - Updatenews360

பிரபலமான அம்மன் பாடலை ஒரு படத்தில் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தி இருப்பார். அதாவது எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் பக்தி பரவசம் தரும் பாடல் தான் கற்பூர நாயகியே கனகவல்லி பாட்டை யுவன் சங்கர் ராஜா தாமிரபரணி படத்தில் வரும் கருப்பான கையாலே என்ன புடிச்சான் என்ற பாடலில் பயன்படுத்தி உள்ளார்.

தீனா:

dhina-updatenews360

செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்ற பாடலை தீனா ஒரு படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த சண்டை படத்தில் தான் இந்த மெட்டு போடப்பட்டு உள்ளது. இந்த ஆத்தா பாடலை அப்படியே உல்ட்டாவாக்கி ஆத்தாடி உன் கண்ணு ரெண்டும் பறக்க வைக்கிற காத்தாடி என்று மாற்றி இருக்கிறார்.

இப்படி இன்னும் பல பாடல்களை இசையமைப்பாளர்கள் தங்களின் இஷ்டத்துக்கு குத்துப் பாடலாக மாற்றி உள்ளார்கள். அதையெல்லாம் இப்போது இசை பிரியர்கள் கண்டுபிடித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 468

2

1