உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2025, 12:11 pm

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.

அதில் ஒருவர் தான் நடிகர் அபிநய். இவர் ஜங்ஷன் உள்ளிட்ட சில படங்களில் தலைகாட்டினார். பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரம் என்றாலே இவர்தான் என்ற அடையாளமாக மாறினார். இதனால் வருத்தப்பட்ட அபிநய், தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறி வருந்தினார்.

வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அபிநய், பல யூடியூப் சேனல்களுக்கு தன்னுடைய வாழ்க்கை, வாழ்வாதாரம் குறித்து உருக்கமாக பேசி வந்தார்.

இந்தநிலையில் தான் ஆளே அடையாளம் தெரியாமல் உடம்பெல்லாம் உருகி போய் கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அபிநய்.

தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநய் வீடியோ வைரலாகி வருகிறது. வயிறு வீங்கி எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்தவர்கள் ஹேண்ட்சம் பாயாக இருந்த அபிநய்யா இது என அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அபிநய்க்கு லிவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டுள்ள நிலையில் ₹28 லட்சம் சிகிச்சைக்காக தேவைப்படுவதாகவும் , உதவி வேண்டி உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அவருடன் நடித்த நடிகர் தனுஷ் தற்போது உச்ச நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் நிலையில், அவர் ஏதாவது உதவி செய்ய முன்வரவேண்டும் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?