30 வருடம் போராட்டம்! ‘என் உயிர் தோழன்’ நடிகர் பக்கவாத பாதிப்பால் காலமானார்!

Author: Vignesh
19 September 2023, 6:00 pm
En-Uyer-Thozhan-Babu - updatenews360
Quick Share

30 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் இருந்த நடிகர் என்னுயிர் தோழன் பாபு தற்போது காலமானார். பாரதிராஜா இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளிவந்த படம் என்னுயிர் தோழன். அப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் பாபு.

இப்படத்திற்கு, பாரதிராஜா உடன் இணைந்து கதையும் தனியாக வசனத்தையும் எழுதியவர் இவர். சரியாக கவனிக்கப்படாமல் போன படங்களில் இந்த படமும் ஒன்று என்று சொல்லலாம். அதாவது, அறிமுக நடிகரான பாபுவின் நடிப்பு அப்போது பலராலும் பாராட்டப்பட்டது.

babu-updatenews360

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய பெரும்புள்ளி படத்திலும் இயக்குனர் பீம்சிங் மகன் கோபி பீம்சிங் இயக்கிய தாயம்மா படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்தவர் பாபு. அடுத்து பொண்ணுக்கு சேதி வந்தாச்சு என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார்.

மனசார வாழ்த்துகிறேன் என்ற படத்தில் நடித்த போது ஒரு உயரத்திலிருந்து கீழே குதிக்க வேண்டிய காட்சியில் டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று பட குழுவினர் எவ்வளவோ சொல்லியும் அதீத ஆர்வத்தின் காரணமாக அவர் மேலிருந்து குதித்தார்.

babu-updatenews360

ஆனால், தவறுதலாக தள்ளி விழுந்து முதுகெலும்பில் பலத்த அடிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுவே, அவருக்கு நிரந்தர படுக்கையானது. சிறிது காலம் நடந்தாலும் மீண்டும் படுத்த படுக்கையானார். அதன் பின்னர் ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வெளிவராமல் போன ஆனந்த கிருஷ்ணா என்ற படத்திற்கு வசனமும் எழுதி இருக்கிறார்.

babu-updatenews360

கடந்த 30 ஆண்டுகாலமாக படுத்த படுக்கையாகவே இருந்தவர் நேற்று இரவு மரணம் அடைந்து விட்டார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜா ராம் சகோதரியின் மகன் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 322

0

0