பிறந்த நாளை முன்னிட்டு இந்தியாவை விட்டுச் சென்ற சிம்பு..? காரணம் என்ன.?
Author: Rajesh2 February 2022, 4:49 pm
நடிகர் சிம்பு நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இணையத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்களில் முக்கியமான அப்பேட்கள் நாளை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.
இந்த நிலையில் சிம்பு தற்போது துபாய் சென்று இருப்பதாகவும், துபாய் அரசு நாளை அவருக்கு கோல்டன் விசா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் பிறந்த நாளன்று துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கெளரவப்படுத்துவதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாய் அரசின் கோல்டன் விசாவை ஏற்கனவே மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலாபால், பார்த்திபன், ஊர்வசி ரெளட்டாலா, மீரா ஜாஸ்மின், த்ரிஷா, பாடகி சித்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
11
3