விஜய்யை நான் தூக்கி வளர்த்தேன்.. இப்ப பார்த்தே ரொம்ப நாள் ஆகுது.. கண் கலங்கிய சித்தி..!

Author: Vignesh
28 October 2023, 11:49 am

நடிகர் விஜய் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக தயாராகி உள்ளது. இந்நிலையில் இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் உடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், நடிகைகள் மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் ஒட்டுமொத்த வெங்கட்பிரபுவின் கேங்கும் இணைந்துள்ளது.

மிகப்பெரிய நட்ச்சத்திர பட்டாளமும் ஒன்றுகூட பூஜை செய்த வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது. பல வருடங்களுக்கு விஜய்யின் தளபதி 68 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இப்படத்தில் நடிக்க விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sheela

இந்நிலையில், விஜயை பார்க்க முடியவில்லை என்று அவருடைய சொந்த சித்தி ஷீலா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ஷீலா பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூர்த்தியின் அம்மாவாக நடித்திருந்தார். அதேபோல, இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் நடிகர் விக்ரகாந்தின் அம்மாவும் இவர்தான்.

sheela

ஷீலா பேசிய போது விஜய் பிறக்கும்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அவர் பிறந்த குழந்தையா இருக்கும்போது அம்மா அக்கா எல்லாம் பயப்படுவாங்க குளிப்பாட்ட. நான் தான் விஜயை குளிப்பாட்டுவேன். இப்போது, வரை அவரை பார்த்து ரொம்ப நாள் ஆகுது அவருடன் பேச முடியவில்லை. விஜயை நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஆனால், இப்போது அவர் பெரிய உயரத்தில் இருக்கிறார். அது சந்தோஷமாக இருக்கிறது என்று ஷீலா பேசியுள்ளார்.

sheela
  • jr ntr stunt double left the job ஜூனியர் என்டிஆரின் கெரியருக்கு மூடு விழா? ஷூட்டிங்கையே முடக்கிப்போடும் சம்பவம்! அடப்பாவமே