நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. உச்ச கட்ட கவர்ச்சியில் சூடேற்றும் நானே வருவேன் நாயகி elli avram ..!
Author: Vignesh27 November 2022, 9:00 am
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது, திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம். இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன்.
குறைவான நேரமே வந்தாலும் வாய்பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், இந்தி நடிகை எல்லி அவ்ரம். தனுஷின் இன்னொரு முகம் தெரிந்ததும் உடலில் தொடரும் பதற்றம், தங்களை விட்டுவிடும் படி கெஞ்சும் பயம் என பரிதாபம் அள்ளுகிறார்.
ஸ்வீடனை சேர்ந்தவர் எல்லி அவ்ரம். அவரின் தாய் ஒரு நடிகை. ஸ்வீடனில் நடித்து வந்த எல்லி, மிக்கி வைரஸ் எனும் படம் மூலம் பாலிவுட் வந்தார். இந்தி படமான குயீனின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்தார் எல்லி. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எல்லிக்கு கிடைத்தது. பாலிவுட் படத்தில் நடித்த முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி தான். நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும், பட்டர்ஃபிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குப்பிடித்தார் எல்லி அவ்ரம்.
தற்போது எல்லி அவ்ரம் லேட்டஸ்ட் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.