கமல் ரூமுக்குள் நுழைந்த குஷ்பு… ஆண்டவர் என்ன செய்தார் தெரியுமா?

Author: Shree
28 March 2023, 9:42 pm
kamal
Quick Share

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சீனிவாச ராவ் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் 4 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த போது “வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்” பாடலின் காஸ்ட்யூம்ஸ் குழுவில் நானும் இருந்தேன்.

அதனால் கமல் சார் அவரின் ரூம் சாவியை என்னிடம் தந்தார்.அப்போது அவரின் அறைக்கு சென்று அங்கிருந்த கமல் சாரின் வாட்ச், ஷுஸ்,பெர்ப்யூம்,போன்றவற்றை போடடு அழகு பார்த்து கொள்வேன். இதனை கமல் சார் கண்டுபிடித்து என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டு செல்லமாக கண்டித்தார் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.

Views: - 573

1

1