இது ஒன்னே போதும்.. இன்னொரு ரவுண்ட் வரலாம்.. கணவர் மறைவுக்கு பிறகு வைரலாகும் மீனாவின் வீடியோ..!

Author: Vignesh
1 May 2023, 7:00 pm
meena - updatenews360 3
Quick Share

90களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை தனது கண்களால் உருவாக்கியவர்.

தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.

meena - updatenews360 3

1982ஆம் ஆண்டு நெஞ்சங்கள் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

இந்நிலையில் மீனா 40 ஆண்டு கால சினிமா பயணம் குறித்து நடைபெற்ற கௌரவ விழாவில் பேசிய நைனிகா தனது அம்மாவை பற்றி தவறாக பேச வேண்டாம் என நடிகை மீனாவின் மகள் நைனிகா உருக்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Meena Husband Vidyasagar - Updatenews360

இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.

meena - updatenews360 2

இதனிடையே, கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடிகை மீனாவுக்கு 40வது பிறந்தநாளையொட்டி விழா எடுத்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் உட்பட தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

meena rajinikanth - update news 360

இந்நிலையில், நடிகை மீனா குறித்து சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்து வந்த வதந்தி தான்.

meena-updatenews360

இந்நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்து உள்ளனர். நீல நிற சேலையில் அழகு தேவதையாக தான் மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு அதோடு இது எப்படி என்பதை போல கண்ணடித்தும் கலக்கியிருக்கிறார் நடிகை மீனா.

Views: - 299

1

0