“புடவைல நடிச்ச பவி டீச்சரா இது ?” – பவி டீச்சர் Photos !

Author: Rajesh
24 May 2022, 6:04 pm

யூடியூப்பில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம், டிவியில வரும் மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிடா தான் இணையத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன். பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

பவியின் ஒவ்வொரு அசைவையும் நம்ம மீமர்கள், மீம்ஸாக்கி கலக்கி வருகின்றனர். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகமாக இடம்பெறுவது பவி டீச்சர் தான்.

மாஸ்டர் படத்தில் கூட முக்கிய கேரக்டரில் பிரிகிடா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ரியாலிட்டி என்னவென்று எல்லோருக்கும் படம் ரிலீசான பிறகு தெரிந்து விட்டது.அதன் பின் முகேன் ராவ் நடித்த வேலன் படத்தில் நடித்தார். அதன் பின் இரவின் நிழல் படத்தில் கதாநாயகியாகி + உதவி இயக்குனராக பணிபுரிகிறார்.

மேலும் இணையத்தில் பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், Workout செய்யும் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “புடவைல நடிச்ச பவி டீச்சரா இது ?” – என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?