அரேபிக் குத்துக்கு செம குத்து டான்ஸ் போட்ட சமந்தா.. வைரல் வீடியோ..!

Author: Rajesh
18 February 2022, 10:36 am
Quick Share

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.

இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் அரேபிக் குத்து பாடல் வெளியாகி உலகம் முழுவதும் செம வைரலாகியுள்ளது. தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அரேபிக் குத்து பாடலுக்கு செம குத்து டான்ஸ் போட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 785

1

0