சமந்தாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சியாகும் பிரபலங்கள்: சிகிச்சைக்கு பின் இப்படியா..? வைரலாகும் வீடியோ..!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 6:32 pm
Samantha_Updatenews360
Quick Share

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கில் Ye Maaya Chesave மற்றும் தமிழில் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. இதற்கு முன்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மற்றும் சில முக்கிய விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 2010ம் ஆண்டு, அதர்வா ஜோடியாக பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த இவர், இதன் பின்னர், நிறைய தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழில் நல்ல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். இதன் மூலம், அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று, தென்னிந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றார். கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் சமந்தா நடித்த யசோதா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் ‘ஷகுந்தலம்’, ‘குஷி’ படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இப்போது சமந்தாவே பெரிய அளவில் எதிர்ப்பார்க்கும் சகுந்தலம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இப்படத்தின் இயக்குனர் குணசேகரன் பேசும்போது, இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அவர் கூற, உடனே எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.இந்நிலையில் சமந்தா ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.

Views: - 299

2

0