ஸ்ருதி ஹாசனுடன் இணையும் லோகேஷ்.. காதலர் தினத்தன்று காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. அப்டேட் தந்த கமல்..!

Author: Vignesh
8 February 2024, 11:51 am
shruti haasan - updatenews360
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh vijay - updatenews360

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இதனிடையே, நடிகை ஸ்ருதி ஹாசன், லோகேஷ் கனகராஜை ரொமான்ஸாக பார்த்து எடுத்த புகைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ருதி இசையமைத்து, பாடி, இயக்கி உள்ள இந்த ஆல்பத்தில் லோகேஷ் நடித்திருக்கிறார். காதலர் தின விருந்தாக இந்த பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Views: - 165

0

0