இரவு பார்ட்டியில் லூட்டி.. அப்பா வயது நடிகருடன் நெருக்கமாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா..!

Author: Vignesh
16 January 2024, 4:46 pm
aishwarya rajesh - updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

aishwarya rajesh - updatenews360

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

aishwarya-rajesh

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், பிறந்தநாளை கொண்டாடி நண்பர்களுக்கு இரவு பார்ட்டி கொடுத்திருக்கிறார். மது பார்ட்டியில் பல நடிகைகள் நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் நடிகர் அர்ஜுனும் கலந்து கொண்டு ஐஸ்வர்யா மற்றும் ஆண்ட்ரியாவுடன் புகைப்படத்தை எடுத்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
aishwarya rajesh - updatenews360
Views: - 225

0

0