பண்ணது திருட்டு… இதுல இத்தனை உருட்டா? ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!!

Author: Vignesh
28 March 2023, 4:10 pm

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போனதாக ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தன் வீட்டில் வேலை பார்க்கும் மூன்று பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக அந்த புகாரில் பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் தீவிர தேடுதல் விசாரணைக்கு பின் கணவன் மனைவி என ஐஸ்வர்யா வீட்டில் வேலைபார்த்த ஜோடி திருடர்கள் பிடிபட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்து வரும் ஈஸ்வரி என்பவர் தன் கணவர் வெங்கட் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று வீடுகள் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் தான் நடிகைகளை வைத்து இருக்கிறார்.

இது பணிப்பெண் ஈஸ்வரிக்கு தெரியுமாம். அவர் அங்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக சிறுக சிறுக தன் கணவரின் உதவியுடன் நகைகளை கொள்ளையடித்து அதை பணமாக மாற்றி செலவழித்து வந்துள்ளனர்.

அதையடுத்து அவர்களை அழைத்து விசாரித்ததில், இவ்வளவு பெரிய வீட்டில் வேலை பார்க்கும் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு தகுந்த சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் திருடினீர்கள் என்ன காரணம்? என்ற கேள்விக்கு “ஐஸ்வர்யா அம்மா எனக்கு ரூ. 30 ஆயிரம் மாத சம்பளம் கொடுத்தார்கள். அது எனக்கு பத்தல. அத வச்ச நான் எப்புடி குடும்பம் பண்றது?

அதனால் எனக்கு தேவைப்படும் போதெல்லாம் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்துவந்தேன். அது அவர்கள் கவனிக்கவில்லை பின்னர் நாட்கள் செல்ல செல்ல பெரிய திருட்டு வேளைகளில் ஈடுபட்டேன் என்றார்.

அவர்கள் வீட்டு லாக்கர் சாவி என்னிடம் தான் இருக்கும் அதனால் வீட்டில் யாரும் இல்லாதபோது சவுகரியமாக நகைகளை திருடினேன். இன்னும் இருந்திருந்தால் இன்னும் திருடியிருப்பேன் என திமிராக பாலி அளித்தாராம். இதை கேட்டதும் நெட்டிசன்ஸ், வீட்டு வேலை செய்யும் உனக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் கொடுத்தும் பத்தலயா? நன்றி கெட்ட நாய் என எல்லோரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

aishwarya - updatenews360

இதனிடையே, வீட்டில் இருந்து 60 சவரன் நகைகளை காணவில்லை என்று கூறினாரே தவிர, அதில் வைரத்தின் மதிப்பு என்ன? எத்தனை கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது என்பது குறித்து ஐஸ்வர்யா கூறவில்லை.

ஆனால் போலிஸார் பணிப்பெண் ஈஸ்வரியின் வீட்டை சோதனையிட்ட போது 100 சவரன் நகை, 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி என மொத்தம் 3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்த நிலையில், எந்தெந்த நகைகள் திருடப்பட்டது என்று ஐஸ்வர்யாவால் தெளிவாக கூற முடியவில்லை, காரணம் அவர் அந்த நகைகளை இறுதியாக தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது அணிந்துவிட்டு லாக்கரில் வைத்ததாகவும், அதன் பின் அந்த நகைகளை எடுத்து பார்க்கவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

aishwarya - updatenews360

பொதுவாக திருட்டு போன நகைகளின் ரசீதை வைத்து போலிஸார் விசாரணை நடத்துவார்கள், ஆனால் எந்தெந்த நகைகள் திருட்டு போனது என்ற திட்டம் ஐஸ்வர்யாவிடம் இல்லாததால், தங்கையின் சவுந்தர்யாவின் திருமண ஆல்பத்தை வைத்து அதில் ஐஸ்வர்யா அணிந்து இருந்த நகைகளை ஒப்பிட்டு காணாமல் போன நகைகளை போலிஸார் மதிப்பிட்டு வருகின்றனர்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 644

    0

    1