சிக்கிமுக்கு ரோடு டிரிப்: தல அஜித்தின் 4500 கிமீ பைக் ரைடு!

18 January 2021, 4:00 pm
Quick Share

தல அஜித் சென்னையிலிருந்து சிக்கிம் பகுதிக்கு சாலை வழியாக பைக் ரைடு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தல அஜித். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல், தனது கடின உழைப்பால் மட்டுமே திரைத்துறைக்கு வந்து சாதித்து காட்டியவர் அஜித் குமார். தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சி இவற்றிற்கு உதாரணமாக செயல்படக்கூடியவர். ஒரு நடிகரோடு மட்டுமல்லாமல், முறையாக பயிற்சி பெற்ற ஒரு பைலட், கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல் வல்லுநர், கேமரா தொழில்நுட்ப வல்லுநர், ரக்‌ஷா குழு, துப்பாக்கி சுடுதல் என்று அஜித்தின் திறமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.


அஜித்தை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். அப்படியில்லை என்றால், கார் ரேஸ், பைக் ரேஸ் போன்றவற்றில் தான் பார்க்க முடியும். தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களைத் தொடர்ந்து படக்குழுவினர் மொராக்கோ செல்ல இருக்கின்றனர்.


இந்த நிலையில், தற்போது ஓய்வில் இருக்கும் தல அஜித் சாலை வழியாக சென்னையிலிருந்து, சிக்கிம் மாநிலத்திற்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வாரணாசியில் உள்ள ஒரு உணவகத்தில் அவர் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சிக்கிம் சென்று பின்னர் அங்கு ஓய்வை கழித்து, ஓரிரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 4500 கிமீ தூரம் அஜித் பைக்கில் பயண்ம் மேற்கொண்டுள்ளார்.

Views: - 7

0

0