சத்தமில்லாமல் உதவி செய்த நடிகர் அஜித்… நெகிழ்ந்துபோன பத்திரிகையாளர்கள்..!

Author: Vignesh
27 December 2022, 12:00 pm
ajith - updatenews360
Quick Share

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் தனது 61வது திரைப்படமான ‘துணிவு’படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

Ajith - Updatenews360

இத்திரைப்படம் வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன், துணிவு படம் போட்டி போடுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ajith and vijay - updatenews360

இந்நிலையில், நடிகர் அஜித் வெளியுலகிற்கு தெரியாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன் செய்தியாளர் ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக குறிப்பிட்ட தொகை தேவைப்பட்டுள்ளது.

இதை கேள்விப்பட்டு உடனடியாக அந்த தொகையை நடிகர் அஜித் கொடுத்து உதவியுள்ளார். ஆனாலும், அந்த செய்தியாளர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ajith - updatenews360 3

செய்தியாளரின் உடலை அவருடைய வீட்டிற்கு ஆம்புலன்சில் வைத்து எடுத்து சென்ற நிலையில், அவருடைய உடல் முதல் மாடி என்பதால் அவருடைய நண்பர்கள் உடலை தூக்க செய்யும் பொழுது, அஜித்தும் அந்த செய்தியாளரின் உடலை தூக்கி சென்றுள்ளார்.

அந்த அளவிற்கு பத்திரிகையாளர்களுடனும், செய்தியாளர்களுடனும் அஜித் நெருக்கமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 384

3

0