அழகான முகத்தை அகோரமாக மாற்றிய எமி ஜாக்சன்.. லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
21 September 2023, 3:15 pm
Quick Share

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை காதலித்து கர்ப்பமாகி சில வருடத்திலேயே இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

அதையடுத்து, மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற வேறொரு ஹாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்து நெருக்கமாக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் தற்போது தனது காதலனுடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள எமி ஜாக்சன் நம் நாட்டின் பிரசித்திபெற்ற இடங்களான ராஜஸ்தான், உதய்ப்பூர், மும்பை, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற இடங்களுக்கு சுற்றிப்பார்த்து வருகிறார்.

மேலும், தனது காதலன் குறித்து பேசிய அவர் எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைதுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். மேலும், நான் கமிட்டாகி இருந்த படங்களில் கூட நடித்துமுடித்துவிட்டேன். எனவே திருமணத்திற்கு இது தான் சரியான நேரம் என கூறினார்.

எமி ஜாக்சன் ஏற்கனவே ஒரு நபரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து கர்ப்பமாகி ஒரு மகனை பெற்று அதன் பின்னர் ஒரே வருடத்தில் அந்த நபரை பிரிந்து இந்த புதிய காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்த நபரை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் இருந்தாலும் கூட அவரது மகனின் எதிர்காலம் தான் கேள்வி குறியாக இருக்கும் என பலர் கூறி வருகிறார்கள்.

amy jackson - updatenews360

இப்படியான நேரத்தில், எமி ஜாக்சன் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டாரா?.. அழகா மாற நினைத்து மோசமாக மாறிவிட்டாரே என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

amy jackson-updatenews360
amy jackson-updatenews360

Views: - 74

0

0