யம்மா கொஞ்சம் அடக்கிவாசிமா…. அந்த விஷயத்தில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அனிகா!

Author: Shree
11 July 2023, 10:40 am
nayanthara anika
Quick Share

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். அதையடுத்து தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க கவனம் செலுத்தி வரும் அனிகா அவ்வவ்போது டாப் ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு கிளாமர், மாடர்ன் என வித விதமாய் ஹைகிளாஸ் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அண்மையில் கூட மாலத்தீவிற்கு ட்ரிப் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நயன்தாராவுக்கே செம டஃப் கொடுத்திருக்கிறார்.

Views: - 462

0

0