ஊசலாடிய உயிர்… உடனடி உதவி – அருண் விஜய்க்கு கைகூப்பி நன்றி சொன்ன பாட்டி!

Author: Shree
20 November 2023, 4:30 pm
arun vijay
Quick Share

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான அருண் விஜய் 1995ம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது கெரியரை துவங்கினார். அவர் தொடர்ந்து காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். பாண்டவர் பூமி போன்று சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவர் முன்னணி நடிகராக வரமுடியவில்லை.

தொடர்ந்து நடித்து வந்த அருண் விஜய்க்கு அடுத்தடுத்து தோல்வி படங்கள் அமைந்ததால் அவர் மார்க்கெட் இழந்து ராசியில்லாத நடிகராக சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். வாரிசு குடும்பத்தில் பிறந்தும், நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதை தேர்வு சரியாக செய்ததால் அருண் விஜய் கெரியரையே இழந்துவிட்டார்.

அதன் பின்னர் 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்படத்தில் அஜித்தை காட்டிலும் அருண் விஜய் கேரக்டர் தான் பெரிதாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் வாய்ப்புகள் மளமளவென குவிந்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் அருண் விஜய்யிடம் வயதான பாட்டி ஒருவர் ஓடிவந்து என் மகன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான். உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளார். உடனே அந்த பாட்டிக்கு வாக்கு கொடுத்த அருண் விஜய் அவரின் மகனுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து அவரின் உயிரை காப்பற்றுள்ளார். இதையடுத்து அந்த பாட்டி அருண் விஜய்க்கு கை கூப்பி நன்றி கூறியுள்ளார்.

Views: - 71

0

0

Leave a Reply