விஜய் இவ்வளவு மோசமானவரா? ஜோதிகாவை கொச்சையாக வர்ணித்த கொடுமை!

Author: Shree
20 November 2023, 5:08 pm
vijay jyothika
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இதில், மீனாட்சி, பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடந்து முடிந்து சென்னை திரும்பினார் விஜய்.

டாப் நடிகராக உச்ச அந்தஸ்தில் இருந்து வரும் நடிகர் விஜய் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. ஆம், நடிகர் ஷாம் தனது அறிமுக படமான 12B படத்தில் ஜோதிகா, சிம்ரன் என இரண்டு முன்னணி நடிகைகள் நடித்திருப்பார்கள். அதை பார்த்த விஜய் ஷாம் இடம் டேய்…. என்னடா அறிமுகமான படத்திலே இரண்டு குதிரைகளுடன் நடிக்கிற என டபுள் மீனிங் அர்த்தத்தில் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் விஜய்யா இப்படி பேசுவது என வாயடைத்துவிட்டனர்.

Views: - 251

0

0