திருமண நாளில் சாயிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு உருகிய ஆர்யா.. !

Author: Rajesh
10 March 2022, 1:07 pm
Quick Share

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிகளுக்கு திருமணமாகி இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திருமண நாளை முன்னிட்டு ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். சாயிஷாவை கட்டிப்பிடித்தபடி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்யா தனது டுவிட்டரில் ‘என்னுடைய அன்பு மனைவிக்கு திருமண வாழ்த்துக்கள்.. எங்களை அக்கறையுடன் ஊக்குவித்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Views: - 840

0

0