அனிதா தந்தையை தொடர்ந்து பாலாஜியின் தந்தை திடீர் மரணம் !

2 February 2021, 8:45 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இந்த சீசன் கடந்த வருடம் அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் , ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சோம், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,ஆரி, அனிதா சம்பத், அர்ச்சனா, சுசித்ரா என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு பிரச்சனை செய்யும், சந்தோஷத்தை கெடுக்கும் வகையில தான் வீட்டுக்குள் இருந்தார். வீட்டுக்குள் எல்லோரிடமும் வம்பிழுத்து பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினார்கள்.

இந்தநிலையில், இவரையும் சில பேருக்கு பிடித்து போக பாலாஜி இந்த நிகழ்ச்சியின் ரன்னர் ஆனார். ஆனால், வெளிய வந்த இவருக்கு, கொஞ்சம் காலம் கூட அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. திடீரென்று பாலாஜியின் தந்தை உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார். தந்தையின் இறுதி சடங்கில் பாலாஜி கண்ணீரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், தந்தையின் இறப்பை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி ‘இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், சமீபத்தில் தான் அனிதாவின் தந்தை காலமாகி இருந்தார். அதே போல கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களான முகேன் மற்றும் லாஸ்லியாவின் தந்தை காலமாகி இருந்தார்கள் என்பது கூடுதல் தகவல்.

Views: - 4

0

0