ரூல்ஸை மீறிய வனிதா.. REDCARD கொடுத்து துரத்தி விட்ட VJ பிரியங்கா..!(வீடியோ)

Author: Vignesh
23 February 2024, 4:33 pm
vanitha_updatenews360
Quick Share

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.

vanitha_updatenews360

பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இதனிடையே வனிதா அப்பா விஜயகுமாருடன் சொத்து தகராறு செய்து அவரை நடுரோட்டில் இழுத்து அடித்து குடும்ப மானத்தையே வாங்கிவிட்டார். அன்றிலிருந்து அந்த குடும்பத்தில் இருந்தே வனிதாவை பிரித்துவிட்டார்கள். இதனால் பல வருடங்களாக தனது மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில், வி.ஜே பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வரும் ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா என்ற நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கில் ரூல்சை மீறியதாக பிரியங்கா வனிதாவிற்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளார். இதனால், வனிதா பிரியங்காவை முறைத்தப்படி பார்க்கும் பிரமோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பிரமோவை பார்த்த ரசிகர்கள் உனக்கு என்னப்பா நீ பைத்தியம் டிஆர்பிக்காக நீ என்ன வேணா பண்ணுவ என்று கலாய்த்து வருகின்றனர்.

Views: - 118

0

0