ரிலீசுக்கு முன்பே பலகோடிகளை அள்ளிய “கேப்டன் மில்லர்” – தனுஷுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்!

Author: Rajesh
5 January 2024, 10:07 am

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஹாலிவுட் படம் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகியது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து இரண்டு லிரிக்கல் பாடல்கள் வெளியாகிது.தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பலகோடிகளை அள்ளியுள்ளது. ஆம், தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை பிஸினஸ் ஆகியிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வல்லுனர்கள் கூறியுள்ளனர். எனவே இப்படம் தனுஷுக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

  • Archana and Arun love story காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!