தொடர் தோல்வி…ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட பிரபலம் : அட்வான்ஸை திருப்பி கேட்டு நச்சரிக்கும் தயாரிப்பாளர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 ஏப்ரல் 2022, 6:26 மணி
Rakul - Updatenews360
Quick Share

சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாவிட்டால் எந்த கதியும் நேரலாம் என்பதற்கு பல நடிகர் நடிகைகள் சாட்டிசியாக உள்ளனர்.

அப்படித்தான் பிரபல வாரிசு நடிகரின் முதல் படத்தில் இந்த நடிகையும் அறிமுகமானார். படத்தை பற்றி பயங்கர எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.

இதையடுத்து தெலுங்கு, இந்தி என பிசியாக வலம் வந்த நடிகைக்கு அங்கேயும் சறுக்கல்கள் ஏற்பட்டது. இருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தை காப்பாற்றினார்.

பின்னர் தமிழில் இவருக்கு அழைப்பு வர, உடனே ஓகே சொல்ல, அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. எப்படியோ தப்பித்தோம் என நினைத்த அந்த நடிகைக்கு, அதன் பிறகு தமிழில் வந்த படம் எல்லாம் தோல்வியையே தழுவின.

குறிப்பாக தமிழில் அண்ணன், தம்பிகளுடன் நடித்த நடிகையாக வலம் வந்த இவருக்கு தொடர்ந்து படம் தோல்வியை சந்தித்ததால், ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.

இளம் நடிகையாக இருந்தும், ஓரளவு கவர்ச்சி காட்டியும் வெற்றி பெற முடியாமல் தத்தளித்த நிலையில், புதிய படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர்.

இதனால் தங்கள படங்களில் ஏற்கனவே புக் செய்த தயாரிப்பாளர் அட்வான்சை திருப்பி கொடுக்க நச்சரித்து வருகின்றனர். இதனால் தனது மார்க்கெட் அவ்வளவுதான் என்ற பீதியில் உறைந்துள்ளார்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1044

    0

    0