இது ரொம்ப தப்புங்க… அஜித் ரசிகர் போட்ட பதிவால் சிக்கலில் சிக்கிய ஆட்டோக்காரர்..!

Author: Vignesh
30 November 2022, 7:30 pm
ajith updatenews360
Quick Share

அஜித் ரசிகரை எச்சரித்து சென்னை டிராபிக் போலீஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

90ஸ்களில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 90ஸ்களில் ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருப்பவர் தான் அஜித்.

ajith - updatenews360.jpg 1

இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். -விளம்பரம்- அதற்க்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

ajith -updatenews360

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

துணிவு படம்:

இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். மேலும், படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது . இதனால், அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்து இருக்கிறார்.

ajith -updatenews360

மேலும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதோடு சில முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் குறித்த தகவல்: தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. -விளம்பரம்- அஜித் ரசிகர் செய்த செயல்: கடைசியாக 2014ஆம் ஆண்டு விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் ஆகிய படங்கள் ஒன்றாக மோதி இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துணிவு மற்றும் வாரிசு படம் ஒன்றாக வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பலருமே அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

மேலும், நாளுக்கு நாள் படத்தின் குறித்த போஸ்டர்களும், பிளக்ஸ்குகளும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் அஜித்தின் ரசிகர் ஒருவர் செய்திருக்கும் செயலை கண்டித்து டிராபிக் போலீஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ட்ராபிக் போலீஸ் போட்ட பதிவு:

அதாவது, அஜித்தின் ரசிகரான ஆட்டோ டிரைவர் அவருடைய ஆட்டோவுக்கு பின்னாடி அஜித்தின் துணிவு படத்தின் போஸ்டர் ஒன்றை வைத்து இருக்கிறார். ஆனால், அந்த போஸ்டர் வண்டி வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைக்கும் வகையில் இருக்கிறது. இதைப் பார்த்த சென்னை டிராபிக் போலீஸ், இப்படி செய்வது தவறான ஒன்று. இந்த புகைப்படம் எடுத்த இடத்தையும், நேரத்தையும் கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பின் நாங்கள் அதை நோட் செய்து விட்டோம் என்று பதிலும் அளித்திருக்கிறார்கள்.

Views: - 369

2

0