அம்மா இறந்த டைம்ல.. எனக்கு யாருமே இல்லை- எமோஷ்னலாக பேசிய குக் வித் கோமாளி பவித்ரா..!

Author: Vignesh
25 January 2024, 1:20 pm
pavithra lakshmi - updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.

சீசன் 2 நிகழ்ச்சி ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள். மக்கள் அவர்களின் ஆசைப்படி இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பவி. இப்போது குறும்படங்கள், போட்டோ ஷுட்கள் என்று பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த நாய் சேகர் படத்தில் நாயகியாக நடித்தும் அசத்தினார், ஆனால் படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

இந்நிலையில் பவித்ரா தன் வாழக்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் பவித்ரா, ” தன்னுடைய சிறுவயதிலிருந்து தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தன்னுடைய அம்மாவிற்கு இந்த விஷயம் பிடிக்காது” என தெரிவித்துள்ளார்.

pavithra lakshmi - updatenews360

மேலும், “அம்மா தன்னை எப்போதும் நன்றாக படிக்க சொல்லுவார் என்றும், தானும் அம்மா படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நன்றாக படிக்க தொடங்கியதாகவும், தான் சென்னைக்கு வந்த பிறகு எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, அப்போது முகம் மற்றும் கால்கள் மோசமாக அடிபட்டு இருந்தது” என தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் உடல் நல குறைவால் அம்மா இறந்து விட்டார்கள். அப்போது, நான் காசியில் இருந்தேன். அந்த கடைசி நேரத்தில் கூட நான் அம்மாவுடன் இல்லை. அவரை கோயம்புத்தூர் கொண்டு செல்வதற்கு எனது நண்பர்கள் தான் உதவி செய்தார்கள். இப்போது எனக்கு யாருமே இல்லை, என் அம்மாவிற்கு நான் நடிப்பதை விட கவிதை, பாடல் எழுதுவது மிகவும் பிடிக்கும், இதனாலேயே, பாடல் மீது எனக்கு அதிக ஈர்ப்பு இருந்தது. இதனால், சின்ன சின்ன கவிதைகள் எழுதி இருக்கிறேன் என்றார். எனக்காக நான் தான் ஓடிக் கொண்டு இருக்கறேன் என நடிகை பவித்ரா அண்மையில் நடந்த பேட்டியில், எமோஷனலாக பேசியுள்ளார்.

Views: - 211

0

0