விரைவில் தொடங்க இருக்கும் CWC சீசன் 5… லீக்கான லிஸ்ட்.. அப்போ சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது..!

Author: Vignesh
23 January 2024, 7:16 pm

சின்னத்திரை வரலாற்றிலே அதிகப்படியான ரசிகர்கள் உள்ள நிகழ்ச்சி என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சொல்லலாம். உலகம் முழுக்க பல கோடி ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கிறார்கள். கடந்த நான்கு சீசன்களாக மாபெரும் வெற்றியை கண்டுள்ள குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அவ்வப்போது எழுந்து தான் வருகிறது.

ஒரு பக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்று கூறி வந்த நிலையில், சமீப காலமாக வெளிவரும் தகவல்களுக்கு சீசன் 5 விரைவில் துவங்க உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை துவங்குவது தான் விஜய் டிவியின் வழக்கம். ஆகவே விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கம்போல் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு நடுவர்களாக இருக்க விஜே ரக்சன் மற்றும் மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள். அதேபோல், சில கோமாளிகள் சீசன் 5 ல் தொடர்வார்கள் என்றும், புதிய கோமாளிகளின் வரவு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் லிஸ்ட் தற்பொழுது, லீக் ஆகியுள்ளது. அதில், விஜய் டிவி தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வரும் பிரபலங்களின் பட்டியல்தான் லீக் ஆகியுள்ளது. எந்த பிரபலங்கள் என்றால், வடிவக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, நடிகை மாளவிகா மேனன், பிக் பாஸ் 7 நடிகர் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா, நடன இயக்குனர் ஸ்ரீதர் மகள் அக்ஷதா போன்றவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!