திருமண நாளில் புது முடிவு? மீண்டும் சேரப் போகும் நட்சத்திர தம்பதி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு பலிக்குமா!!

Author: Vignesh
18 November 2022, 6:15 pm

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து ஹாலிவுட் சினிமா வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருகிறார் தனுஷ். கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிடுவதாக கூறி ஒரு அறிக்கையை தனுஷ் வெளியிட்டார்.

Dhanush-and-Aishwarya-updatenews360

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் பங்கிற்கு அறிக்கையை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதனை சரிசெய்ய பல்வேறு தரப்பினர் பேசி வந்துள்ளனர். ரஜினிகாந்த் பேச்சை தனுஷ் கூட கேட்காமல் 150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்.

Dhanush-and-Aishwarya-updatenews360

கூடிய சீக்கிரமே ஐஸ்வர்யாவுடன் சமரசமாகி ஜனவரி மாதம் குடியேறப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை தனுஷ் – ஐஸ்வர்யாவின் 18வது திருமண நாளான இன்று நவம்பர் 18 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறப்பட்டது.

Dhanush Aishwarya - Updatenews360

ஆனால் இருவரும் அதைபற்றி கவலைப்படாமல் தனுஷ் வாத்தி படத்தின் அப்டேட்டும், ஐஸ்வர்யா லால் சலாம் படத்தின் வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகிறார்கள். எப்படியாவது இருவரும் மகன்களுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரசிகர்கள் சினிமா பிரபலங்களும் ஆசையோடு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?