முடிவுக்கு வந்த ரசிகர்களின் காத்திருப்பு: தனுஷ் வாழ்த்துக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா தனுஷ்..!

Author: Rajesh
18 March 2022, 11:17 am
Quick Share

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.

இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரிடப்பட்டு உருவாகியுள்ளது.

இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ்-ம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே, இவர்கள் இணை வேண்டும் என்று சமூக வலைதளங்களில், ரஜினி ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் கணவன், மனைவி உறவு வைத்து வாழ்த்து தெரிவிக்காமல் நண்பர்கள் போல் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். ஆகையால் இருவரும் மீண்டும் இணைவதற்கு சாத்தியமே இல்ல என்றே தெரிகிறது. இவர்களின் ட்டுவிட்டர் பதிவின் மூலம் இருவரும் இணைவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

Views: - 871

0

1