வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

Author: Prasad
18 June 2025, 6:55 pm

கைமாறிய STR 49

சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கிய நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இணையத்தில் லீக் ஆன புகைப்படம்

இந்த நிலையில் வெற்றிமாறன், சிம்பு, இயக்குனர் நெல்சன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்தில் தென்படும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது. இது வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள  திரைப்படத்தின் புரொமோஷனை படமாக்கியபோது படப்பிடிப்பின் ஊடே  எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.

director nelson in str 49 movie

நெல்சன் இருப்பதன் பின்னணி

இப்புகைப்படத்தில் இயக்குனர் நெல்சன் ஏன் இடம்பெற்றுள்ளார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் அந்தணன், இயக்குனர் நெல்சன் அத்திரைப்படத்தின் புரொமோவில் நடிக்கிறாராம், ஒரு வேளை தேவைப்பட்டால் திரைப்படத்தில் நடிப்பாராம். குறிப்பாக இந்த புரொமோவில் இயக்குனர் நெல்சனாகவே அவர் வருகிறாராம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் அந்தணன். 

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்
  • Leave a Reply