படுக்கையறை காட்சி, லிப் லாக் சீன் என எல்லை மீறிய சீரியல்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
17 May 2023, 1:30 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.

eeramana rojave 2-updatenews360

அந்தவகையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் ஈரமான ரோஜாவே 2. சமீபகாலமாக வெள்ளித்திரை படங்களுக்கு இணையாக நடிகை நடிகர்களிடன் ரொமான்ஸ் காட்சிகள் படுமோசமான எடுக்கப்பட்டு வருகிறது.

eeramana rojave 2-updatenews360

இந்த சீரியலில் அம்மாவில் எதிர்ப்பை மீறி சமீபத்தில் ஜேகே – ரம்யா கல்யாணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி முதலிரவு காட்சியை சீரியல் குழு எடுத்துள்ளது. அந்த வெளியாகி குடும்பத்துடன் பார்க்கும் சீரியலில், அதிலும் குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் இப்படியான காட்சிகள் வைப்பது முகம் சுளிக்க வைக்கிறது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?