எல்லாமே வெளிப்படையா தெரியுது : சினிமா நடிகைகளை மிஞ்சிய சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 ஜனவரி 2022, 4:49 மணி
Radhika Preeti- Updatenews360
Quick Share

முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் திரைக்கதை விறுவிறுப்பாகவும் எல்லாருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. ஆனால் தற்போது பட பெயரையே நாடக தொடர்களுக்கும் வைக்க ஆரம்பித்து விட்டனர். பெயர் மட்டும் இல்லாமல் படத்தின் பாடல், பிண்ணனி இசையையும் அடித்து விடுகிறார்கள்.

பட பெயரை நாடகத்திற்கு வைப்பதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி யில் போட்டிப் போட்டு கொண்டு சூட்டி வருகின்றனர். ஜீ தமிழும் அதற்கு விதிவிலக்கல்ல.
வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் நீண்டு கொண்டே போகிறது.

ன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலும் ஹிட்டானது. அதில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் படிப்பை முடித்து, முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் சன் டிவி யில் பூவே உனக்காக சீரியலில் நடித்து நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். தற்போது, விமான நிலையத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சினிமா நடிகைகளையே மிஞ்சிட்டீங்க என விமர்சித்து வருகின்றனர்.

  • Ar Diary லட்டு விவகாரத்தில் ஆள்மாறாட்டம் செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம்? என்ட்ரி கொடுக்கும் சிறப்பு புலனாய்வு குழு!
  • Views: - 4132

    5

    0