“தலைய யாராலையும் தடுக்க முடியாது..” அஜித்தை புகழ்ந்து தள்ளிய போனி கபூர் !

Author: Babu Lakshmanan
23 October 2021, 9:52 am
ajith cover - updatenews360
Quick Share

H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. ஷூட்டிங் முடித்து விட்ட களைப்பில் வீட்டில் படுத்து தூங்காமல் குஷியாக பைக்கை எடுத்து ஊர்சுற்ற கிளம்பி விட்டார் நம்ம தல. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், வெளியான வலிமை GLIMPSE ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், வட இந்தியா முழுவதும் Bike-ல் ட்ரிப் படித்து வருகிறார் அஜித். சில நாட்களுக்கு முன்பு கூட வாகா எல்லையில் தேசியக் கொடியை பிடித்து வலிமையாக நின்றுள்ளார் அஜித். அதன் அதன் புகைப்படங்கள் செம வைரலாக பரவியது என்பதை மறுக்க முடியாது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட போனிகபூர் “தலையை தடுக்க முடியாது” என்று ட்விட் செய்துள்ளார்.

Views: - 595

1

0