நடிகர் அஜித்தின் REEL தம்பி திடீரென மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் ரசிகர்கள்…

Author: Babu Lakshmanan
7 March 2023, 11:07 am
Quick Share

இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். சிறுத்தை திரைப்படத்தை இயக்கி புகழ் பெற்றதால், சிறுத்தை சிவா என்று இவர் அழைக்கப்படுகிறார். இவர் அஜித் குமார் நடிப்பில் இயக்கிய ‘வீரம்’ திரைப்படமும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

பின்னர், இவர் மீண்டும் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றிய ‘வேதாளம்’ திரைப்படமானது, 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. மூன்றாவது முறையாக அஜித்குமார் மற்றும் சிவா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘விவேகம்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றபோதிலும் நல்ல வருவாய் ஈட்டித்தந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாலா, சிவா இயக்கிய ‘வீரம்’ படத்தில், நடிகர் அஜித்திற்கு, தம்பியாக நடித்து பிரபலம் அடைந்தார். இயக்குநர் ஆகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் பாலா.

கடந்த 2002ஆம் ஆண்டு ‘அன்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. பின்னர் காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் உட்பட சில படங்களில் நடித்தார். இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் பாலா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 245

0

0