சிவகார்த்திகேயனை தோனியுடன் ஒப்பிட்டுக் டிவிட் போட்ட பிரபல இயக்குனர் ! காண்டான தோனி ரசிகர்கள்…!

16 August 2020, 12:30 pm
Quick Share

நேற்று இணையதளங்களில் கிட்டத்தட்ட ஒரு மினி ஒப்பாரி வைத்து விட்டார்கள் நமது நெட்டிசன்கள். ஏன் என்றால் தோனி அவர்கள் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் அறிவித்துவிட்டார் அதற்கு பல ரசிகர்களும், பிரபலங்களும் வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் தோனியின் ஓய்வு குறித்து கூறியபோது ’எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான கேப்டன் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுடைய அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு விஜய் சேதுபதியின் குருவும், இயக்குனருமான சீனு ராமசாமி, “சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். தோனி போல் நண்பர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் நீங்கள் வாய்ப்பு அளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

சீனு ராமசாமி அவர்களின் இந்த சமூக வலைத்தள பதிவுகள் தற்போது தோனி ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0