உலகளவில் தமிழ் படத்திற்கு கிடைக்க போகும் அங்கீகாரம்.. நிறைவேற்றத் தயாராகும் ஜெய் பீம்.?

Author: Rajesh
8 February 2022, 11:59 am

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் பாராட்டுகளை பெற்ற திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’.உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில், இருளர், பழங்குடியினர்களின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்திருப்பார்.

இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர். வரவேற்புக்கு மத்தியில் சர்ச்சைகளையும் கிளப்பிய ‘ஜெய் பீம்’ படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. ஆஸ்கர் கமிட்டியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம் பெற்று, முதன்முறையாக ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெறும் தமிழ் படத்தின் காட்சி என்ற பெருமையை பெற்றது ஜெய் பீம்.

JaiBhim- Updatenews360

ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ள நிலையில், அந்த 10 படங்களில் ஜெய் பீம் படமும் ஒன்றாக இருக்க வேண்டுமென இந்திய ரசிகர்களின் வேண்டுதலாக உள்ளது.

இந்நிலையில் பிரபல விமர்சகரும், ராட்டன் டொமேட்டோஸ் ஆசிரியருமான ஜாக்குலின் கோலே போட்டுள்ள ட்விட் தற்போது வைரலாகி வருகிறது. அதில், பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருக்கும் படங்களில் எது உங்களை வியப்படைய செய்யும்? என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜாக்குலின் ‘ஜெய் பீம்’ என கூறியுள்ளார். இதனால் ஆஸ்கர் இறுதிப்போட்டிக்குள் ‘ஜெய் பீம்’ படம் நுழைந்துள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!