இது பொன்னியின் செல்வன் கதையா..? மேடையில் மணிரத்தினத்தை பங்கம் செய்த இளையராஜா..!

Author: Vignesh
5 January 2024, 6:15 pm
ilayaraja
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

ilayaraja 1

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார். வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம்.

பல மேடையில் பெரிய பிரபலங்கள் என்று கூட பார்க்காமல் திட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது. ஆனால் தற்போது தான் அப்படிப்பட்டவன் இல்லை என்று இளையராஜா கூறியுள்ளார். ஆம், ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் மால்யத் என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அவர் “கர்நாடக சங்கீதத்தில் நான் கைதேர்ந்தவன் இல்லை. எனவே இசைஞானி என்ற பட்டத்துக்கு நான் தகுதியானவனா? என்பது பெரிய கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் என்னை இசைஞானி என அழைப்பதற்கு நான் உண்மையில் தலைவணங்குகிறேன். அதே நேரத்தில் இசைஞானி என்பதால் எனக்கு எந்த கர்வமும் கிடையாது.

Ilayaraja- updatenews360

நான் கச்சேரிகளில் ஹார்மோனியம் வாசித்தபோது மக்கள் கைத்தட்டி ஊக்கம் கொடுப்பார்கள். ஆனால் அது எனக்கான கைதட்டல் இல்லை அந்த பாடலின் மெட்டு போட்டவருக்கான கைதட்டல் என்று பின்னர் தான் தெரிந்தது. எனவே எனக்கு கர்வம் இல்லை, பெருமை இல்லை என்றெல்லாம் பேசிவிட்டு மூன்று நாட்களில் மூன்று படங்களுக்கு பின்னணி இசையமைத்த இசையமைப்பாளர் உலகத்திலேயே நான் மட்டும்தான் என்று பெருமை பொங்கினார். இதனை கேட்ட அந்த விழாவில் இருந்தவர்கள் இந்த மனுஷன் என்ன தான் சொல்ல வருகிறார் என்று விமர்சித்தனர்.

ponniyin selvan

மேலும், இளையராஜா பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பொன்னியின் செல்வன் நாவலை நான் எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது நானும் பாரதிராஜா பாஸ்கரும் போட்டி போட்டு படிப்போம். பொன்னியின் செல்வன் படத்தில் அந்த ஒரிஜினல் பீல் கொஞ்சம் கூட இல்லை, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை நன்றாக படித்தவர்களுக்கு அது தெரியும் என்று இளையராஜா கூறியுள்ளார்.

Views: - 202

0

0