வடிவேலுவை தொடர்ந்து 5 நடிகர்களுக்கு ரெட் கார்ட்?.. வளர்ந்து வரும் போது இது தேவையா..? ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
19 June 2023, 3:21 pm

தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் கமிட்டாகி விட்டாள் முடித்து கொடுப்பது வழக்கம். ஆனால், அப்படி சில நடிகர் நடிகைகள் ஆணவத்தில் தான்தான் பெரியவன் என்று நினைத்து முறையாக ஷூட்டிங்கிற்கு செல்லாமல் ஷூட்டிங்கில் எல்லை மீறியபடி நடந்து கொள்வது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பது சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து நான்கு ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரை தொடர்ந்து ரெட் காட்டில் சிக்கி உள்ள முன்னணி டாப் நடிகர்கள் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.

திரைப்பட தயாரிப்பாளருக்கு முறையான ஒத்துழைப்பு கொடுக்காதது விஷால், எஸ் ஜே சூர்யா, சிம்பு, யோகி பாபு, அதர்வா போன்ற நடிகர்களிடம் விளக்கத்தை கேட்டு தமிழ் திரைப்படத்துறை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் அனைவரும் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரெட் கார்ட் விதிக்கவும், தயாரிப்பாளர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?