நான் தனிமையில் சாகிறேன்… கதறி அழுத ரைசா வில்சன் – ஆதரவு கூறி அரவணைக்கும் பிரபலங்கள்!

Author: Shree
19 May 2023, 12:37 pm
raiza wilson
Quick Share

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய நடிகை ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்து சினிமாவில் நுழைந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் கமல்ஹாசனால் நடத்தப்பட்ட பிக் பாஸ் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து அவருக்கான அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் உள்குத்து , தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகளுக்காக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரைசா தற்போது தனிமையில் கண்ணீர் விட்டு கதறி அழுத புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,

“இது எளிதானது அல்ல” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ஜிவி பிரகாஷ், மஞ்சிமா மோகன், சீரியல் நடிகை பரீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கவலைப்படவேண்டாம் நாங்கள் உன்னோடு இருக்கிறோம் என அன்பை பொழிந்து வருகிறார்கள். இதன் மூலம் ரைசா மிகவும் மோசமான மனஉளைச்சலில் தனிமையில் தவித்து வருகிறார் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

Views: - 512

0

2