ஜெயிலருக்கு வந்த சோதனை.. சகுனமே சரியில்லையே, சோலி முடிஞ்சு?.. வருத்தத்தில் படக்குழு..!

Author: Vignesh
1 August 2023, 4:30 pm
jailer - updatenews360
Quick Share

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

RAJINI JAILER

தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.

kavalaya song-updatenews360

இந்நிலையில் தற்போது, ஜெயிலர் படத்திற்கு அமெரிக்கா, யூகே போன்ற இடங்களில் முன்பதிவில் பாக்ஸ் ஆபிஸில் அதிர வைத்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஜெயிலர் படத்திற்கு எந்த ஒரு சிறப்பு காட்சியும் இல்லை.

படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் என்று தெரிவித்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் படத்தின் ஓபனிங் வசூலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர். ஆனாலும், ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பு காட்சி அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 268

0

0