டாட்டா காட்டிய சீரியல் நடிகை.. புதிய அவதாரத்தில் பெரிய திரையில் : காவ்யா அறிவுமணியின் சூப்பர் படம் இதோ!!

Author: Vignesh
9 November 2022, 8:15 pm
kaavya - updatenews360
Quick Share

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பை அழகாக காட்டுவதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரில் நடித்த காவியா அறிவுமதி விலகியதால் தற்போது சிற்பிக்குள் முத்து சீரியலின் கதாநாயகி முல்லையாக நடித்து வருகிறார்.சீரியலில் இருந்து விலகிய பிறகு காவியா என்ன செய்கிறார்? என்ன படத்தில் நடிக்கப் போகிறார்? என்பதை அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். காவியாவிற்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார்.

kaavya - updatenews360

ஆகையால் அவர் முதல் முதலாக மிரள் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் பரத், வாணி போஜன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டரை காவியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

திரில்லர் படமாக உருவாகி இருக்கும் மிரள் திரைப்படமானது ஹாலிவுட் படத்திற்கு நிகராக வெறும் 20 நாட்களிலேயே எடுத்து முடித்து இருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சக்திவேல் இயக்கி உள்ளார்.

kaavya - updatenews360

மேலும் மிரள் படம் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகிறது. மிரள் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிப்பது குறித்து காவியா ரசிகர்களிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் இவருடைய விதவிதமான ஹாட் புகைப்படங்களை பதிவிடுவதில் மட்டும் காவியா மேடம் படு பிஸியாக இருக்கிறார்.

kaavya - updatenews360

மேலும் காவியாவின் ரசிகர்கள் இவரை ‘குட்டி நயன்தாரா’ என்றும் இவர் பதிவிடும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிக்கும் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அத்துடன் மிரள் படத்தில் காவியாவின் நடிப்பை பார்ப்பதற்காகவும் படத்திற்காகவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Views: - 470

5

1