50 வயதில் 18 கிலோ உடல் எடை குறைத்த கஜோல்… ஆச்சர்யமூட்டும் டயட் சீக்ரெட்ஸ்!

Author: Shree
26 September 2023, 9:55 pm
kajol
Quick Share

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

kajol

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் கஜோல் 18 கிலோ வரை உடல் எடை குறைத்து சிக்கென மாறி இளம் ஹீரோயின்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட டயட் பிளான் பலரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. நாள் ஒன்றிற்கு 1-2 மணி நேரம் அவுட் செய்வாராம். சைவம் என எடுத்துக்கொண்டால் மீன் உணவை தான் கஜோல் அதிகம் எடுத்து கொள்வாராம்.

kajol updatenews360

அதேபோல் வெள்ளை உணவுகளான சர்க்கரை, உப்பு, அரிசி, பால், மைதா ஆகியவற்றை அறவே நிறுத்தி கொண்டாராம். ஒருநாளைக்கு 8 டம்ளர் வெந்நீர் குடிப்பாராம். மாலை நேரத்தில் 40 நிமிடம் யோகா செய்வாராம். யோகா செய்ய முடியாத நேரத்தில் வாக்கிங் செல்வாராம். இதெல்லாம் தவறாமல் செய்து உடலை ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாற்றிக்கொண்டாராம்.

Views: - 467

0

0