கமலை மிரட்டப் போகும் பிரபல ஹீரோ.. – கெத்தான சம்பவம் பண்ண போகும் H.வினோத்..!

Author: Vignesh
17 June 2023, 3:15 pm
Quick Share

கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படமான விக்ரம் சூப்பர் ஹிட் கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.

இதனிடையே, கமலஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கமலஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் தனது KH 233 படத்தை பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் H. வினோத் இயக்க உள்ளதாகவும், மேலும், இந்த படத்தில் திரைக்கதை தயாரிக்கும் பணியை கமல் அலுவலகத்தில் தொடங்கியுள்ளார் என்றும், இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் என இயக்குனர் வினோத்திடம் கமல் கூறியுள்ளாராம்.

இதனால் விஜய் சேதுபதியை மனதில் வைத்துக்கொண்டு இயக்குனர் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம். இதற்காக விஜய் சேதுபதியிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில், சம்பளம் மற்றும் காட்சி தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது என தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவருமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Views: - 428

1

0