“கங்குவா” படத்தின் வெறித்தனமான அப்டேட் கொடுத்த சூர்யா – சிறப்பான சம்பவம் இருக்கு!

Author: Rajesh
11 January 2024, 10:48 am
kanguva update
Quick Share

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

surya

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது 2024ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை நடிகர் சூர்யா கொடுத்துள்ளார். கங்குவா படத்தின் கடைசி ஷாட்டை முடித்துவிட்டேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி என்று குறிப்பிட்டு கையில் வாளுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது உறுதியாகிவிட்டதால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Views: - 203

0

0